வாள்வெட்டுச் சந்தேக நபர்கள் மூவர் கொட்டாஞ்சேனையில் கைது
19-03-2017 02:34 PM
Comments - 0       Views - 15

-எஸ்.நிதர்ஸன்

யாழில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவர், கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அண்மைக்காலமாக யாழின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் ஆவா என்ற குழுவினரே தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, அக் குழுவைச் சேர்ந்த சிலர், ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டதுடன், பிரதான சந்தேக நபர்கள், யாழிலிருந்த தப்பியோடி தலைமறைவாகியிருந்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் மூவர், கொட்டாஞ்சேனையில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும், யாழ். பொலிஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

"வாள்வெட்டுச் சந்தேக நபர்கள் மூவர் கொட்டாஞ்சேனையில் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty