போராட்டக்காரர்களை சந்தித்தார் ரொறன்ரோ மாநகராட்சி மேயர்
19-03-2017 03:01 PM
Comments - 0       Views - 72

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும், காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம், 12 நாளாக இன்று தொடர்கின்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், தமது பிள்ளைகள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தாம் வாழ்ந்து வருவதாக இந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வைக்குமாறு காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்றையதினம் முல்லைத்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்ட ரொறன்ரோ மாநகராட்சி மேயர்  மற்றும்  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சந்தித்து  கலந்துரையாடினர்

இந்த வியஜத்தின்போது கனடா- ரொறன்ரோ நகரின் மாநகர சபை பிரதிநிதி மைக்கல் தொம்சன் கனடா- ரொறன்ரோ நகரின் மாநகர சபையின் இலங்கை வம்சாவளியை சேர்ந்த நீதன் சண்   வடமாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாணசபை  உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்

"போராட்டக்காரர்களை சந்தித்தார் ரொறன்ரோ மாநகராட்சி மேயர் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty