பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸுக்கு வெள்ளி விருது
19-03-2017 11:57 PM
Comments - 0       Views - 9

இலங்கையின் வங்கிசாராத நிதித்துறையின் முன்னோடியாகத் திகழும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, அதன் சமூகப்பொறுப்புணர்வு செயற்பாடுகளின் அர்ப்பணிப்புக்காக 2016ஆம் ஆண்டுக்கான இயன் டயஸ் அபேசிங்க ஞாபகார்த்த ASTECA CSR/ Sustainability வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

கொழும்பு, கலதாரி ஹொட்டலில் 2ஆவது, வருடாந்த JASTECA விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. 

21 வருட காலமாக, நிலைபேணியலுமை மற்றும் வினைத்திறனை பேணி வரும் நிறுவனங்களை இனங்கண்டு கௌரவிக்கும் நடவடிக்கைகளை JASTECA முன்னெடுத்து வருகிறது. JASTECA விருதுகள் 2016இன் மூலமாக, மூன்று பிரதான பிரிவுகள் இலக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் Taiki Akimoto “5S”விருது, Nagaaki Yamamoto Kaizen விருது மற்றும் இயன் டயஸ் அபேசிங்க ஞாபகார்த்த JASTECA CSR/ Sustainability விருது போன்றன அடங்கியுள்ளன. 

இயன் டயஸ் அபேசிங்க ஞாபகார்த்த JASTECA CSR/ Sustainability விருது 2016 என்பது பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் மூன்று பிரதான கொள்கைகளான மக்கள், புவி மற்றும் இலாபம் ஆகியவற்றுக்கு நிறுவனம் காணப்பிக்கும் அர்ப்பணிப்பை கௌரவித்து வழங்கியிருந்தது. 

நிறுவனத்தின் இலக்குகள் மற்றும் நீண்ட கால குறிக்கோள்களில் கவனம் செலுத்தி, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸின் ஐந்து கிடையான சமூகப்பொறுப்புணர்வு மாதிரி என்பது, தொழில்முயற்சியாண்மை மற்றும் நிதி உறுதிப்பாடு அபிவிருத்தி, வீதிப் பாதுகாப்பு, கல்வியை மேம்படுத்தல், நிலைபேறான சமூக அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவற்றை தனது சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுடன் முன்னெடுத்த வண்ணமுள்ளது. 

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸின் நிலைபேறான செயற்பாடுகள் ஐக்கிய நாடுகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஒப்பானதாக அமைந்துள்ளன. 

1995ஆம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரசாங்க வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாராத நிதிசார் துறையில் சந்தை முன்னோடி எனும் ஸ்தானத்தை 14 வருடங்களாக பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தன்வசம் பேணி வருகிறது. 

நிறுவனத்தின் உயர் தர கடன் நியமத்துக்காக, Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது.  

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில், லீசிங், தனிநபர் மற்றும் வர்த்தக கடன்கள், பெக்டரிங் (Factoring), மார்ஜின் டிரேடிங் (Margin Trading) மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன. 

இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களான பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியவற்றூடாக மேலும் பெறுமதி சேர்க்கப்பட்ட நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. 

"பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸுக்கு வெள்ளி விருது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty