‘மிரட்டினால் அறிவிக்கவும்’
19-03-2017 06:24 PM
Comments - 0       Views - 17

முழுமையாக மூடப்படும் தலைக்கவசம் அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிள் செலுத்தி செல்பவர்களை, போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அச்சுறுத்தி வருவதாக அகில இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் இவ்வாறான  அச்சுறுத்தல்கள் இடம்பெறுவது தொடர்பில் முறைபாடுகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்றுள்ளதாக சங்கத்தின் செயலாளர் சிராந்த அமரசிங்க தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால்,077-3083479 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு அகில இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"‘மிரட்டினால் அறிவிக்கவும்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty