பரிஸ் விமான நிலையத் தாக்குதலாளி ‘அல்லாவுக்காக இறக்கவிருந்தார்’
19-03-2017 09:30 PM
Comments - 0       Views - 2

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் ஒர்லி விமான நிலையத்தில், படைவீரரொருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரெஞ்சு நபரான ஸியெட் பெல்கசெம், “அல்லாவுக்காக இறக்கவிருந்ததாகவும்” ஏனையோரைக் கொல்ல முயன்றதாகவும் அறிவிக்கப்படுகிறது.

பரிஸில் பிறந்த 39 வயதான குறித்த நபர், படைவீரரொருவரைத் தாக்கியபோது, கொல்லப்பட்டிருந்தார். படைவீரரைப் பிடித்து, அவரது ஆயுதத்தை பறிக்க முற்பட்டபோதே, அவர் கொல்லப்பட்டிருந்தார்.

பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை, பென் பெல்கசெம் கொண்டிருந்ததாகவும் இஸ்லாமிய தீவிரமயப்படுத்தலுக்கான சமிக்ஞைகளை வெளிக்காட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பயங்கரவாத எண்ணப்பாடுகளைக் கொண்ட, மிகவும் வன்முறை மிக்க தனிநபராக, பெல்கசெமை, பிரான்ஸ் அரச வழக்குத் தொடருநர் பொஸ்வா மொலின்ஸ் வர்ணித்திருந்தார். இதேவேளை, பெல்கசெம்மின் அயலவர்கள், பயங்கரமான முகத்தைக் கொண்ட பிசாசு எனக் கூறியுள்ளனர்.  நீதிமன்றங்களிலும் சிறைச்சாலைகளிலும் பரவலாக அறியப்பட்ட பெல்கசெம், பொருட்களைத் திருடியது முதல் வன்முறைக்காக, ஒன்பது தடவைகள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டில், ஆயுதக் கொள்ளைக்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது தவிர, போதைப்பொருள் கடத்தலுக்காக, 2009ஆம் ஆண்டு, மூன்று, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

"பரிஸ் விமான நிலையத் தாக்குதலாளி ‘அல்லாவுக்காக இறக்கவிருந்தார்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty