எதிரிகளின் இடங்களை கிழக்கு லிபிய இராணுவம் கைப்பற்றியது
19-03-2017 11:37 PM
Comments - 0       Views - 8

லிபியாவின் பெங்காசிக்கு தென்மேற்காகவுள்ள, இஸ்லாமிய ஆயுததாரிகளினால் தலைமை தாங்கப்படும் எதிரிப்படைகளின் இறுதி நிலைகளை, தாம் நேற்று (18) கைப்பற்றியுள்ளதாக, கிழக்கு லிபியப் படைகள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையான அடுக்குமாடிக் தொகுதிகளிலிருந்து எதிர்ப்பை வெளிப்படுத்திய ஆயுததாரிகளின் எதிர்ப்புகள் அடங்கியுள்ளன.  

லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியை கைப்பற்றுவதற்காக, மூன்று ஆண்டுகளாக நடவடிக்கையை மேற்கொண்டுவரும், கிழக்கு லிபியாவைத் தளமாகக் கொண்ட லிபிய தேசிய இராணுவம், கடந்தாண்டு ஆரம்பத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியபோதும், வடக்கு புறநகர்களின் சில இடங்களில் எதிர்ப்பை எதிர்நோக்குகிறது. 

அதிகாலையில், கட்டத்தில் இருந்த எதிரி ஆயுததாரிகள் வெளியேற முயன்றதைத் தொடர்ந்து முற்றுகை முடிவுக்கு வந்ததாக, லிபிய தேசிய இராணுவத்தின் சிறப்புப் படைகளின்  பேச்சாளர் மிலாட் அல்-ஸவாய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 23 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாகவும் லிபிய தேசிய இராணுவத்தின் படைவீரர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் குறைந்தது ஆறு பேர் காயமடைந்ததாகவும் மிலாட் அல்-ஸவாய் கூறியுள்ளார்.

இந்நிலையில், லிபிய தேசிய இராணுவத்தின் எதிரிகள் 40 பேரளவில் கொல்லப்பட்டதாக, லிபிய தேசிய இராணுவத்தின் பேச்சாளர் அஹ்மெட் அல்-மிஸ்மரி தெரிவித்துள்ளார்.

"எதிரிகளின் இடங்களை கிழக்கு லிபிய இராணுவம் கைப்பற்றியது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty