பிறர் கருமங்களை உதாசீனம் செய்வது அநியாயம்
20-03-2017 09:54 AM
Comments - 0       Views - 53

அரச திணைக்களத்துக்கு மக்கள் சேவைகளைப் பெறச் செல்லும்போது சில சகிக்க முடியாத அனுபவங்களைப் பெறுவதுண்டு. ஆர்வத்துடன் செல்லும் ஒருவர், தனக்குத் ​தேவையான விவரங்களை அறிய முடியாமல் மனவருத்தத்துடன் திரும்புவதுண்டு. 

ஒருவாறு பிரயாசைப்பட்டு, அவரது அலுவல் தொடர்பான அலுவலரிடம் சென்று உதவிகளைக் கோரும்போது, சம்பந்தப்பட்ட கோவை மிக அருகிலேயே இருக்கும்போது, அதனை எடுத்து விரித்துப் படிக்கச் சோம்பல்பட்டு, “அது இங்கே இல்லை” எனச் சர்வசாதாரணமாகச் சொல்வதுண்டு. இதனைக் கேட்டால், வந்திருக்கும் பொது மகனுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்பதை அந்த அலுவலர் உணருவதேயில்லை. 

பராமுகமும் சோம்பேறித்தனமும் கொண்டவர்கள் புனிதமான சேவைக்கு உகந்தவர்களேயல்லர். தங்களது சொந்த விடயங்களை உற்சாகமாகச் செய்பவர்கள் பிறர் கருமங்களை உதாசீனம் செய்வது ரொம்பவும் அநியாயமாகும். 

 

வாழ்வியல் தரிசனம் 20/03/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   

"பிறர் கருமங்களை உதாசீனம் செய்வது அநியாயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty