பாதையை புனரமைக்க கோரிக்கை
20-03-2017 10:17 AM
Comments - 0       Views - 14

லிந்துலை, சென்றெகுலர்ஸ் கிளனிகல்ஸ் தோட்டத்துக்குச் செல்லும் பாதை, புனரமைக்காமல் காணப்படுவதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

சுமார் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இத்தோட்டமானது, ஹென்போலட் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.  

இத்தோட்டப் பாதையானது, கரடு முரடாகக் காணப்படுவதால் தாம் போக்குவரத்து செய்வதில் பல்வேறு இடர்களை எதிர்கொள்வதாக, தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். பாதை சீரின்மைக் காரணமாக, இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் மூன்று கர்ப்பிணிகள், நோய்க்காவு சிகிச்சை வண்டியிலேயே, சிசுவை பிரசவித்ததாகவும் தோட்ட மக்கள் சுட்டிக்காடுகின்றனர்.  

எனவே, தோட்ட மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இப்பாதையை செப்பனிட்டுத் தருமாறு, தோட்ட மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.   

"பாதையை புனரமைக்க கோரிக்கை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty