ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
20-03-2017 10:58 AM
Comments - 0       Views - 55

-பொன் ஆனந்தம்

திருகோணமலை, அபேயபுர சிங்கள ஆரம்பப் பிரிவு பாடசாலையில் காணப்படும்; ஆசிரியர்களுக்கான  பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அபேயபுர சுற்றுவட்டத்தில் பெற்றோர் இன்று (20) காலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 308 மாணவர்கள் கல்வி கற்றுவரும் இப்பாடசாலைக்கு 8 ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில், தற்போது 4 ஆசிரியர்கள் மாத்திரமே உள்ளனர். எனவே, 4 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்ட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் கண்டி -திருகோணமலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதுடன், வாகன நெரிசலும் ஏற்பட்டது.

 

"ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty