விபத்தில் மாணவி பலி
20-03-2017 11:48 AM
Comments - 0       Views - 76

கண்டி புகையிரதத்துக்கு முன்பாக, ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்​டியிலுள்ள பிரபல மகளிர் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்த நிமேஷா பிரபோதினி கம்லத் என்ற மாணவியே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், அலுன்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரத்தியேக வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்லும் நோக்கில் மேற்படி மாணவி,  மஞ்சட் கோட்டுக் கடவையினூடாக பாதையை கடக்க முயன்றபோது,  அவ்வீதி வழியாக வந்த மணல்லொறி,  மாணவியின் மீது மோதியுள்ளது. இச்சம்பவத்தில் மாணவி ஸ்தலத்திலேயே பலியானார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை, கண்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மஹியங்கனையைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

"விபத்தில் மாணவி பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty