நுளம்புகளுக்கு புகை அடிக்கும் 42 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
20-03-2017 12:32 PM
Comments - 0       Views - 61

-வடமலை ராஜ்குமார்

நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை அடிக்கும் ஊழியர்கள் 42 பேருக்கு உடனடியாக நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று (20) நடைபெற்றபோதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுபாணி தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், 'கடந்த காலத்தில் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், ஏனைய மாவட்டங்களில் நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை அடிக்கும்  ஊழியர்களுக்கு  நிரந்தர நியமனங்களை அரசாங்கம் வழங்கி வைத்தது. ஆனால், திருகோணமலையில் பணியாற்றிவரும் இந்த  ஊழியர்களுக்கு இதுவரையில் நிரந்தர நியமனங்கள் வழங்காமல்;  உள்ளமையானது இம்மாவட்டம் புறக்கணிப்பட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகின்றது' என்றார்.

இக்கூட்டத்தில் மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்தபோது,  'நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் ஊழியர்களை ஏற்கெனவே பணிக்கு அமர்த்தியிருந்தால்,  டெங்கு நோய் தொடர்பில் திருகோணமலையில் பாரதூரமான நிலைமை ஏற்பட்டிருக்காது' என்றார்.

 

"நுளம்புகளுக்கு புகை அடிக்கும் 42 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty