ஆசிரியையை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்
20-03-2017 12:39 PM
Comments - 0       Views - 170

எஸ்.சதிஸ்

மாணவி ஒருவரின் பணத்தை திருடிய சந்தேகத்தில், ஆசிரியை ஒருவர், மாணவர்கள் அறுவரின் கையில் கற்பூரத்தை கொளுத்தியச் சம்பவமொன்று, பொகவந்தலாவைக்கு உட்பட்ட பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்காரணமாக, மாணவரொருவரின் வலது கையில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

மேற்படி பாடசாலையில் தரம் 3 இல் கல்விப் பயின்று வரும் மாணவர்களே இவ்விபரீத சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து, மாணவர்களின் கையில் கற்பூரம் கொழுத்திய ஆசிரியையை இடமாற்ற கோரி, பொகவந்தலாவை ரொப்கில் தோட்ட மக்கள், இன்றுக் காலை ஆரப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஹட்டன் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் பொலிஸார் பாடசாலைக்கு விரைந்துள்ளனர்.

" ஆசிரியையை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty