மட்டு. அரசியல்வாதிகளுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகள் அழைப்பு
20-03-2017 01:22 PM
Comments - 0       Views - 68

-வா.கிருஸ்ணா

தமது சத்தியாக்கிரகப் போராட்டம் புதன்கிழமையுடன் ஒரு மாதத்தை அடையவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் அனைவரையும் காந்தி பூங்காவுக்கு அன்றையதினம்  வருகை தருமாறு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தங்களுக்கு அரசாங்க நியமனங்களை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 22ஆம் திகதி காந்தி பூங்காவுக்கு  முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

தங்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை இதுவரையில் அரசாங்கமோ,   அரசியல்வாதிகளோ, கிழக்கு மாகாண சபை மூலமோ எடுக்கப்படவில்லை எனவும் இப்பட்டதாரிகள் தெரிவித்தனர்.

தமது சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் புதன்கிழமையுடன்  ஒரு மாதமாகின்றது.  

மட்டக்களப்பிலுள்ள அரசியல்வாதிகள் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகைதந்து தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் தமக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

 

" மட்டு. அரசியல்வாதிகளுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகள் அழைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty