ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழைப்பாணை
20-03-2017 01:39 PM
Comments - 0       Views - 84

பேரின்பராஜா திபான்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கின் சாட்சியாளர்களான ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பாணை பிறப்பித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் அப்போதைய பொது வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவினதும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் போலிக் கையெழுத்துக்களைக் கொண்ட ஆவணைத்தைத் தயாரித்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

 

"ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழைப்பாணை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty