கர்ப்பிணி கொலை : கணவனின் இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்ள உத்தரவு
20-03-2017 03:18 PM
Comments - 0       Views - 87

-எம்.றொசாந்த்

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் கணவரின் இரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று உத்தரவிட்டார்.

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணியும் 4 வயது சிறுவன் ஒருவரின் தாயான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர், கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவருடைய கொலை தொடர்பில், மண்டைதீவு பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் சென்ற இருவர் அதே தினத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு கடந்த திங்கட்கிழமை (13) விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உயிரிழந்த பெண்ணின் கணவரான ஞானசேகரம் மற்றும் அன்டன் ஜீவானந்தம் ஆகியோரின் இரத்த மாதிரிகளை நாளை செவ்வாய்க்கிழமை (21) பெற்றுக்கொள்ள சட்டவைத்திய அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடித்து, நீதவான் உத்தரவிட்டார்.

"கர்ப்பிணி கொலை : கணவனின் இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்ள உத்தரவு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty