வவுனியா யங்ஸ்ரார் கால்பந்தாட்ட அணித்தலைவர் மீது தாக்குதல்
20-03-2017 03:38 PM
Comments - 0       Views - 3

-க.அகரன்

வவுனியா, யங்ஸ்ரார் காலபந்தாட்ட அணித்தலைவர் மீது, வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்தியதையடுத்து, வவுனியா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, “அணித்தலைவர் இ.கார்த்திகேயன் (வயது 29), நகரில் இருந்து சென்ற போது, வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் குழுவினர் வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டதுடன், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை திருடியுள்ளனர்.

அதனையடுத்து காயமடைந்த நபர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா கால்பந்தாட்ட சம்மேளனத்தால் தடை செய்யப்பட்ட கால்பந்தாட்ட அணியின் உறுப்பினர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுவதுடன், இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

"வவுனியா யங்ஸ்ரார் கால்பந்தாட்ட அணித்தலைவர் மீது தாக்குதல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty