பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை
20-03-2017 03:54 PM
Comments - 0       Views - 15

-க.அகரன்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட பிரதிநிதி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து, வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

15.03.2017 தொடக்கம், வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள்  தொழில் சேவை மத்திய நிலையத்தில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் வேலைத்திட்டம், காலை 9 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெற்று வருகின்றது.

இப்பதிவு நடவடிக்கைகளின் இறுதி திகதி  24.03.2017ஆகும்.   இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத  வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், விரைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

"பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty