'சுதந்திரத்துக்காக போராடியது தவறா?'
20-03-2017 03:55 PM
Comments - 0       Views - 14

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து போராடிய நாங்கள், இப்போது ஓலை குடிசைகளில் வறுமையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களால் முன்னர்போல் இயல்பாக எந்த வேலைகளையும் செய்ய இயலவில்லை.

எமக்கு வீட்டுதிட்டம் கூட வழங்கப்படவில்லை. அதேபோல் எமக்கு வேலைவாய்ப்பும் இல்லை. தகுதி இருந்தும் கல்விச் சான்றிதழ்கள் இன்மையால் எமக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகின்றது. எமக்குரிய மறுவாழ்வை பெற்று கொடுங்கள்”  என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கனடா,  ரொறான்ரோ மாநகர மேயர் ஜோன் ரொறி ஆகியோரிடம், முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் போராளி ஒருவர் தெரிவிக்கையில், “எங்களால் முன்னர் போல் எந்தவொரு வேலையையும் செய்ய இயலவில்லை. நான் தடுப்புமுகாம் மற்றும் பூசா உள்ளிட்ட சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அங்கே எமக்கு ஊசி போடப்பட்டது உண்மையே” என்றார்.

மற்றுமொரு முன்னாள் பெண் போராளி கருத்து கூறுகையில் “நானும் எனது கணவரும் முன்னாள் போராளிகள். நாங்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக சுதந்திரத்துக்காக போராடியது தவறா? இன்றும் நாங்கள் இருவரும் ஒரு ஓலை குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்” என்றனர்.

 

 

"'சுதந்திரத்துக்காக போராடியது தவறா?'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty