சாரதிக்கு 37 1/2 வருடங்கள் சிறை
20-03-2017 04:16 PM
Comments - 0       Views - 123

14 பயணிகள் உயிரிழக்கவும் 19 பேர் படுகாயமடையவும் காரணமாக இருந்தச் சம்பவத்தில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட பஸ் சாரதிக்கு, 37 1/2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குருநாகல் - மடகல்ல பிரதேசத்தில், 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டிலேயே இந்த தண்டனையை, குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜயசுந்தர,  வழங்கினார்.  

குருநாகல் வடக்கு டிப்போவில் கடமையாற்றிய எச்.எம்.பிரேமரத்ன (வயது 47) என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோதனை செய்யாமல் வாகனத்தை செலுத்தி, பயணிகளை கொலைச் செய்ததாக, குறித்த சாரதிக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், சட்டமா அதிபர் உடாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானதையடுத்து, உயிரிழந்த பயணிகளுக்காக, தலா 2 வருடங்கள் வீதம் 28 வருடங்களும், படுகாயமடைந்த 19 பயணிகளுக்காக, தலா 6 மாதங்கள் வீதம் 9 1/2 வருடங்கள் என மொத்தமாக 37 1/2 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

2003 ஜூலை 04ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான வழக்கு, 2007ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன், நீண்ட காலமாக 7 நீதிபதிகளின் கீழ், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.  

இந்த விபத்து தொடர்பில் 84 பயணிகள் சாட்சியாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன், படுகாயமடைந்த பயணிகளில் சிலர் மரணமடைந்ததால், 74 பேரின் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  
இறுதி வழக்கு விசாரணையின் ​போது, அதில் 13 பேரின் சாட்சிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. 

"சாரதிக்கு 37 1/2 வருடங்கள் சிறை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty