மோட்டர் சைக்கிளுக்குத் தீ வைப்பு
20-03-2017 04:18 PM
Comments - 0       Views - 14

க. அகரன்

வவுனியா, ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியிலுள்ள வீடொன்றின்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள், இனந்தெரியாத நபர்களால், இன்று அதிகாலை 3 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வீட்டின் முன்னால் மோட்டர் சைக்கிளை நிறுத்தி விட்டு, வீட்டு உரிமையாளர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டு வளவுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள், வாழைத்தோட்டத்தில் வைத்து மோட்டர் சைக்கிளைத் தீ வைத்து எரியுட்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அயல் வீட்டார் ஏதோ ஒரு பொருள் எரிவதை அவதானித்து கூக்குரல் இட்டபோது, மோட்டர் சைக்கிள் எரிந்துகொண்டிருந்துள்ளது.

இது தொடர்பில் ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

"மோட்டர் சைக்கிளுக்குத் தீ வைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty