உறவினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
20-03-2017 04:20 PM
Comments - 0       Views - 64

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை போதைப்பொருள் குற்றத்தடுப்பு விசேட பொலிஸாரைத் தாக்கியும் வாகனத்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது சய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று உறவினர்களையும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் எச்.எம்.எம். பஸீல், இன்று (20) உத்தரவிட்டார்.

கடந்த ஜுலை மாதம் 17ஆம் திகதி, சம்மாந்துறையிலுள்ள வீடொன்றில், கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, அம்பாறை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அவிடத்துக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி வாகனத்துக்கும் சேதத்தை ஏற்படுத்திருந்தனர்.

இதையடுத்து, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையையடுத்து சம்மந்தப்பட்ட 3 உறவினர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

"உறவினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty