2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மனிதக் கடத்தலுக்காகக் கைதானவர் ஜனவரியிலும் ஆட்களைக் கடத்தினார்

Niroshini   / 2017 மார்ச் 20 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதக் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 3 பேருடன் சேர்ந்து மும்பையில் வைத்துக் கைதான, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், இவ்வாண்டு ஜனவரியிலும், இலங்கையைச் சேர்ந்த இருவர், போலிக் கடவுச்சீட்டுடன் ஐக்கிய இராச்சியம் செல்வதற்கு உதவினார் என, இந்தியப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜூலி ஆன் வோணர் என்ற 36 வயதான குறித்த பெண், மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இம்மாதம் 15ஆம் திகதி கைதாகியிருந்தார். இலங்கையைச் சேர்ந்த 4 பேரை, போலியான கடவுச்சீட்டுகளுடன் அனுப்புவதற்கு முயன்றபோதே, அவர் கைதாகியிருந்தார்.

இந்நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சுற்றுலா வழிகாட்டியான தான், லோகராஜன் என்ற இலங்கையைச் சேர்ந்த முகவரை, 6 மாதங்களுக்கு முன்னர் சந்தித்த பின், மனிதக் கடத்தலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்துக்கு அனுப்பப்பட இருந்தவர்களிடம், தலா 17 இலட்சம் இந்திய ரூபாய்களைப் பெற்றுள்ள இவர், விசாரணைகளில் போதுமானளவு ஒத்துழைக்கவில்லை என, பொலிஸாரால் அறிவிக்கப்படுகிறது.

எனினும், கடத்தப்படவிருந்த இலங்கையர்கள் நால்வரும், ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்ற பின்னர், அங்குள்ள அதிகாரியிடம் சரணடைய எதிர்பார்த்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளால், தமது உயிர்களுக்கு ஆபத்து எனக் கூறி, அரசியல் புகலிடம் கோரவே, அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .