மெனிக்பாலம் கால்நடை பண்ணையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
20-03-2017 04:45 PM
Comments - 0       Views - 7

மு.இராமச்சந்திரன்

முகாமையாளரின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து, போபத்தலாவ மெனிக்பாலம் கால்நடை பண்ணையின் ஊழியர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

கால்நடை வளர்ப்பு பண்ணையின் முகாமையாளர், கடும்போக்குடன் செயற்படுவதுடன் தொழிலாளர்களின் உரிமைகளையும் மறுத்துவருகின்றார். அத்தோடு, சட்டத்துக்கு முறனான வகையில், இடமாற்றங்களைச் செய்வதுடன் பொலிஸாரின் உதவியுடன் அடக்குமுறையையும் மேற்கொள்ள முனைவதாக, ஆர்பாட்டகாரர்கள் இதன்போது தெரிவித்தனர்.

பண்ணையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர், இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இவ்விடயம் தொடர்பில்,  பாற்பண்ணைக்கு பொறுப்பான  உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரியத் தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தப்பின்னர், ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டப் போதிலும், வேலை நிறுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்கார்கள் இதன்போது, கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

"மெனிக்பாலம் கால்நடை பண்ணையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty