பிரதம நிறைவேற்று அதிகாரியாக நந்தன ஏக்கநாயக்க
20-03-2017 05:08 PM
Comments - 0       Views - 14

Siam City சீமெந்து நிறுவனத்தின் (முன்னர் ஹொல்சிம் என அழைக்கப்பட்டது) புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நந்தன ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இவர் Siam City சீமெந்து (வியட்நாம்) நிறுவனத்தின் பன்முகப்படுத்தல் செய‌்ற்றிட்டத்தின் நிதிப் பணிப்பாளராக செயலாற்றியிருந்தார். இதுவரை காலமும் இந்த பதவியை வகித்த பிலிப்பே ரிச்சார்ட் இடமிருந்து இந்த பொறுப்புகளை நந்தன ஏற்கவுள்ளார். பிலிப்பே ரிச்சார்ட் வியட்நாம் செயற்பாடுகளுக்கான பொது பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஹொல்சிம் வியட்நாம் செயற்பாடுகளின் நிதி பணிப்பாளராக 2007 ஜுன் மாதம் முதல் நந்தன செயலாற்றி வந்தார். வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவர் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி எனும் பதவியை இவர் வகித்திருந்தார்.

அதற்கு முன்பு ஹொல்சிம் லங்கா நிறுவனத்தின் நிதி மற்றும் கட்டுப்பாடுகளுக்கான உதவி தலைவராக பணியாற்றியிருந்தார். ஹொல்சிம் லங்கா நிறுவனத்தில் மட்டுமின்றி, ரூஹுணு சீமெந்து மற்றும் ஹேலீஸ் லிமிட்டெட் ஆகியவற்றில் இவர் சிரேஷ்ட முகாமைத்துவ நிலைகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

" பிரதம நிறைவேற்று அதிகாரியாக நந்தன ஏக்கநாயக்க" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty