2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

லேடி ரிட்ஜ்வேக்கு HNB கிராமீன் பங்களிப்பு

Gavitha   / 2017 மார்ச் 21 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நுண்நிதியியல் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் HNB கிராமீன் நிறுவனத்தின் மூலமாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு 3.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ சாதனங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.  

நிறுவனத்தின் வருடாந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்ற்றிட்டங்களுக்கமைய இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், சமூகத்தில் தேவைகள் நிறைந்தவர்களின் நிலையை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. HNB கிராமீன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மேற்கொண்டிருந்தப் பங்களிப்புகளினூடாக இச்செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது.  

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டபிள்யு.கே. விக்ரமசிங்க, HNB கிராமீன் ஃபினான்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர்,பிரதம நிறைவேற்று அதிகாரி சமிந்த பிரபாத், பிரதம தொழிற்பாட்டு அதிகாரி பிரியலால் அரங்கல, பதில் பொது முகாமையாளர் பிமல் செனவிரட்ன ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.  

இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்ட பொருட்களில், விசேடமாக அமைந்த ஐந்து பார்வையிடல் பகுதிகளைக் கொண்ட ஒலிம்பஸ் போதனா நுண்காட்டி (Model-BX53) அடங்கியிருந்தது. இது வைத்தியசாலையின் ஹேமடொலொஜிகல் வெவ்வேறு பிரிவுகளுக்கு அவசிய தேவைகளாகக் காணப்பட்ட மருத்துவ உபகரணங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன.  

HNB கிராமீனின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமிந்த பிரபாத் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் பொறுப்பு வாய்ந்த நிதிசார் நிறுவனம் எனும் வகையில், சிறுவர்களை அடிப்படையாகக் கொண்டு HNB கிராமீன் மூலமாக வெவ்வேறு சமூகப் பொறுப்புணர்வுச் செயற்றிட்டங்கள் வருடாந்தம் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் எதிர்கால சந்ததிக்கு உதவிகளை வழங்குவது என்பதில் நிறுவனம் உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. “ஆரோக்கியம் என்பது சொத்து” எனும் நம்பிக்கையின் பிரகாரம், சிறுவர் சுகாதாரப்பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .