2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹட்டன் குப்பைகள் நாற்றம் எடுக்கின்றன

Kogilavani   / 2017 மார்ச் 22 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் திண்மக் கழிவு அகற்றும் பிரிவினரால் சேகரிக்கப்படுகின்ற கழிவுகள், தற்சமயம் ஹட்டன் நகரிலுள்ள மரக்கறி வியாபார சந்தைப் பகுதியில் கொட்டப்பட்டுவதால், தாம் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில், ஹட்டன் குடாஓயா பகுதியிலேயே, குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதற்கு குடாஓயா மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, ஹட்டன்-டிக்கோயார நகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்குக் கொட்டப்படுவது இடைநிறுத்தப்பட்டதுடன், ஹட்டன் நகரிலுள்ள மரக்கறி வியாபார சந்தைக்கு அருகில் கொட்டப்பட்டு வருகின்றது.

மேற்படி இடத்துக்கு அருகில், பிரதான பஸ்தரிப்பு நிலையம், கடைத் தொகுதிகள் உணவகங்கள் என பலவும் உள்ளன.

குப்பைகள் காரணமாக, இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது அதிகரித்திருப்பதால் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே, குப்பை விவகாரத்துக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .