2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழ். நகர தந்திரோபாய நடவடிக்கை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

யாழ். நகர தந்திரோபாய நடவடிக்கை என்னும் திட்டத்துக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி சம்மதித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு முதலமைச்சரின் அலுவலகத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்றது.

உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ், 5 வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ள யாழ் நகர தந்திரோபாய நடவடிக்கை என்னும் திட்டம் தொடர்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த திட்டத்தின் கீழ் பருத்தித்துறை- கொடிகாமம், பொன்னாலை-காரைநகர், ஆகிய வீதிகள் குறித்த திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணம் பழைய பூங்கா, யாழ். மந்திரிமனை ஆகியன பழைமை மாறாது புனரமைக்கப்படவுள்ளன. மேலும், யாழில் உள்ள குளங்கள் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் அதிகாரிகள், பொறியியலாளர்கள், ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .