2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல்

George   / 2017 மார்ச் 22 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதலாளி எனக் கருதப்படுபவர், ஆயுதந்தரித்த பொலிஸரால் சுடப்பட்டதாக, சபாநாயகர் டேவிட் லிடின்ங்டன் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில், குறைந்தது ஐந்து பேர், காரால் மோதப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒரு பெண் இறந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஏனையவர்கள் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மூன்று அல்லது நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, பிரதமர் தெரேசா மே பாதுகாப்பாக நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தற்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X