2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பொறிமுறைகளை அமைக்கவும்

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பு சீர்த்திருத்தங்களில், இலங்கையின் நம்பிக்கையளிக்கக்கூடிய முன்னேற்றங்களை வரவேற்ற மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் பின் ராட் அல்-ஹுஸைன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குரிய பொறிமுறைகளை அமைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.  

எவ்வாறெனினும், நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கான நடைமுறை தாமதமாக இருப்பதாக அல் ஹுஸைன் கூறியுள்ளார். ஆக, இலங்கையின் இணை அனுசரணையில் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்திலுள்ள அனைத்து நீதிப் பொறிமுறைகளையும் கவனத்திலெடுக்க வேண்டும் என அல்-ஹுஸைன் கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பிலான அறிக்கை மீதான விவாதம் நேற்று ​(22) இடம்பெற்றது. அதில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வலிந்து காணாமல் போகச் செய்தவர்கள் விடயத்திலும் தவலறியும் விடயத்திலும் முன்னேறங்களை இலங்கை கண்டுள்ளதாகத் தெரிவித்த அல் ஹுஸைன், இவை சர்வதேச நிலைகளுக்கேற்றவாறு உள்நாட்டு சட்டத்தில் அமுல்படுத்த வேண்டுமெனக் கூறியுள்ளார்.  

அடுத்து, பாதிக்கப்பட்டோரிடத்தே அதிகரிக்கும் வெறுப்பை சமாளிப்பதற்கு, நம்பிக்கையை கட்டமைப்பதற்கான நடவடிக்கைகள் கட்டாயம் வேகப்படுத்தவேண்டும் என அல் ஹூஸைன் கூறியுள்ளார்.

இதில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்கள் விடுவிக்கப்படுவதும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த அல் ஹூஸைன், இந்த விடயம் இன்னும் மெதுவாகவே இருப்பதாகக் கூறியுள்ளார்.  

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு இயைபாக மாற்றும் நடவடிக்கை நடந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் இன்னும் முடிவடையவில்லை என்றும் அல் ஹுஸைன் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இவை தவிர, உண்மையக் கண்டறியும் நடவடிக்கைகள் இடம்பெறுவது போன்று தென்படுவதாகத் தெரிவித்த அல் ஹூஸைன், எனினும் இந்த நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுடனும் சிவில் சமூகத்துடனும் இணைந்து இடம்பெறவேண்டுமெனக் கூறியுள்ளார்.  

இதேவேளை, சில வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படாமை குறித்து கவலை வெளியிட்டுள்ள அல் ஹூஸைன், பாரதூரமான குற்றங்களை விசாரித்து, வழக்குத் தொடர்ந்து, தண்டனை வழங்குவதில் காணப்படும் தொடர்ச்சியான தோல்வி அல்லது பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான பயம் காரணமாக, வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்பு வழக்குரைஞர்கள், அனுமதிக்கப்பட்ட வழக்குத் தொடருநர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்க வேண்டிய தேவையுள்ளதாக கூறியுள்ளார்.  

இந்நிலையில், சில தடுப்புகளில், ஜனாதிபதியின் நடவடிக்கைகளை வரவேற்றதாகத் தெரிவித்த அல் ஹூஸைன், எவ்வாறெனினும், துன்புறுத்தல், அதிகப்படியான படையை பயன்படுத்தல் தொடருவதாகச் சாடியுள்ளார்.  

இவை தவிர, இலங்கையின் சிவில் சமூகமும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் துன்புறுத்தல், அச்சுசுறுத்தலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அல் ஹூஸைன் கூறியுள்ளதுடன், ஜெனீவாவில் சிவில் சமூக அங்கத்தவர்கள் அச்சுறுத்தப்பட்ட அறிக்கைகள் குறித்து வருத்தமடைவதாகவும் கூறியுள்ளார்.   இதில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்கள் விடுவிக்கப்படுவதும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த அல் ஹூஸைன், இந்த விடயம் இன்னும் மெதுவாகவே இருப்பதாகக் கூறியுள்ளார்.  

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு இயைபாக மாற்றும் நடவடிக்கை நடந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் இன்னும் முடிவடையவில்லை என்றும் அல் ஹுஸைன் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இவை தவிர, உண்மையக் கண்டறியும் நடவடிக்கைகள் இடம்பெறுவது போன்று தென்படுவதாகத் தெரிவித்த அல் ஹூஸைன், எனினும் இந்த நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுடனும் சிவில் சமூகத்துடனும் இணைந்து இடம்பெறவேண்டுமெனக் கூறியுள்ளார்.  

இதேவேளை, சில வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படாமை குறித்து கவலை வெளியிட்டுள்ள அல் ஹூஸைன், பாரதூரமான குற்றங்களை விசாரித்து, வழக்குத் தொடர்ந்து, தண்டனை வழங்குவதில் காணப்படும் தொடர்ச்சியான தோல்வி அல்லது பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான பயம் காரணமாக, வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்பு வழக்குரைஞர்கள், அனுமதிக்கப்பட்ட வழக்குத் தொடருநர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்க வேண்டிய தேவையுள்ளதாக கூறியுள்ளார்.  

இந்நிலையில், சில தடுப்புகளில், ஜனாதிபதியின் நடவடிக்கைகளை வரவேற்றதாகத் தெரிவித்த அல் ஹூஸைன், எவ்வாறெனினும், துன்புறுத்தல், அதிகப்படியான படையை பயன்படுத்தல் தொடருவதாகச் சாடியுள்ளார்.  

இவை தவிர, இலங்கையின் சிவில் சமூகமும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் துன்புறுத்தல், அச்சுசுறுத்தலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அல் ஹூஸைன் கூறியுள்ளதுடன், ஜெனீவாவில் சிவில் சமூக அங்கத்தவர்கள் அச்சுறுத்தப்பட்ட அறிக்கைகள் குறித்து வருத்தமடைவதாகவும் கூறியுள்ளார்.  

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .