2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தமிழ் இளைஞர்களை கோட்டாவே கொன்றார்’

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் தொடர்பான பெயர் பட்டியல் தன்னிடம் உள்ளதாக, தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதியை, மக்கள் பாவனைக்காக நேற்று (22) திறந்து வைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,    

“கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் தமிழ் இளைஞர்கள் உட்பட 551 பேர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது.  

இலக்கத்தகடு இல்லாத வாகனங்களில் உத்தியோகபூர்வ சீருடையின்றி வந்து, தம்மை அடையாளப்படுத்தாமல், நள்ளிரவில் வந்து கதவுகளைத் தட்டி தூக்கிச்சென்றனர். இதற்கெதிராக, நான் முன்வந்தபோது என்னுடன் லசந்த விக்ரமதுங்க இருந்தார். அது குறித்து எழுதியதினால் அவர் படுகொலை செய்யப்பட்டார். ரவிராஜ் என்னுடன் இருந்து, அதற்கெதிராகக் குரல் கொடுத்தமையால் அவரும் கொலை செய்யப்பட்டார்.  

ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக வழக்காடும் நிலைக்கு நாட்டைத் தள்ளியமைக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்கவேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .