2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நுழைந்த மாணவனுக்கு நன்னடத்தை

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை யசோதரா மகளிர் மகா வித்தியாலயத்துக்குள் பலவந்தமான நுழைந்து, கட்டுக்கடங்காத வகையில் நடந்துகொண்ட, கொழும்பு-03 மஹாநாம கல்லூரியில் 12ஆம் தரத்தில் பயிலும் மாணவன், எதிர்வரும் 31ஆம் நன்னடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, குறித்த மாணவன் கொழும்பு பிரதான நீதவான் லால் விஜயசிங்ஹ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். 

அதனடிப்படையில், குறித்த மாணவன் மாகொல சிறுவர் இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதியன்று அம்மாணவனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.  

வித்தியாலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து, மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் பிரதான நுழைவாயில், பாதுகாப்பு கூடாரத்துக்கு சேதம் விளைவித்ததாக அந்தக் கல்லூரியின் அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.  

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரிக்கும், மஹாநாம கல்லூரிக்கும் இடையில், நாளை (24), நாளை மறுதினம் (25) இடம்பெறவிருக்கின்ற பெரும் சமர் கிரிக்கெட் போட்டிக்காக கடந்த 21ஆம் திகதியன்று பேரணியாக சென்றபோதே, குறித்த மாணவன், அக்கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .