2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'பாகிஸ்தானிய அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது'

Niroshini   / 2017 மார்ச் 23 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பாகிஸ்தானிய அரசாங்கம், இலங்கையில் சமூக துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதுடன், வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்தல், குடி நீர் கிணறுகளை அமைத்தல், கனிணி நிலையங்களை அமைத்தல், பாடசாலைகளில் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது” என, இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சையத் ஷகில் ஹிசைன் தெரிவித்தார்.

பாகிஸ்தானிய இஸ்லாமிய குடியரசின் 77ஆவது தேசிய தின நிகழ்வுகள், கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் இன்று நடைபெற்றது. இதன்போ​தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

 

“இவ்விரு நாடுகளினதும் முக்கியத்துவத்தினால், நாடுகளுக்கிடையில் வர்த்தக கலந்துரையாடல்கள், நாகரீகங்கள் மற்றும் கலாசாரம் போன்ற விடயங்களில் மேலும் முன்னேற்றம் காணப்படுகின்றது.

 1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 திகதியானது பாகிஸ்தானின் வரலாற்றில் மிகவும் முக்கியமான தினமாகும். இந்நாளிலேதான் பாகிஸ்தான் என்ற எண்ணக்கரு உருவானதுடன், தெற்காசிய முஸ்லிம்கள் தங்களுக்கென ஒரு சுதந்திர தேசத்தினை உருவாக்குவதற்கு உறுதிகொண்டனர். அத்துடன், 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 சுதந்திர தேசமான பாகிஸ்தான் எம் முன்னோர்களின் அயராத முயற்சி மற்றும் மகத்தான  தியாகத்துடன் உருவாக்கப்பட்டது.

மேலும், இருதரப்பு உறவுகளானது 2500 வருடங்களுக்கு மேல் பழமையானது. கந்தாரா நாகரீக காலத்திலிருந்து இந்த உறவு தொடர்கிறது.

மேலும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் கௌரவம் ஆகிய இரு தூண்களினால் இருதரப்பு உறவுகள் உறுதியாக நிலைத்து நிற்கின்றன. உயர்தர பயணங்கள், பறிமாற்றங்கள் மற்றும் நிறுவன வழிமுறைகள் இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .