2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கின்னஸ் சாதனை கிடைக்குமா?

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

நாடாளுமன்ற வரலாற்றிலே மக்கள் மனுக்களை, நான்தான் அதிகளவில் சமர்ப்பித்துள்ளேன் அதற்காக, எனக்கு கின்னஸ் சாதனை கிடைக்குமா என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேட்டதற்கு, அதற்கான சந்தர்ப்பம் உண்டு என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.  

இவர், மக்கள் மனுக்கள் 33ஐ கடந்த 22ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டே மேற்கண்டவாறு கேட்டார்.  

இதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் ஒரே நாளில், ஆகக்கூடுதலான மக்கள் மனுக்களை சமர்ப்பித்தவர் என்ற பெருமை, தற்போதைய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினரான வாசுதேவ நாயணக்காரவுக்கே உண்டு. அவர் ஒரேநாளில் 21 மனுக்களைச் சமர்ப்பித்திருந்தார்.  

அவருக்கு அடுத்தப்படியாக, தற்போதைய ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினரான காமினி லொக்குகே, ஒரேநாளில் 18 மனுக்களை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

மக்களுக்கு இடம்பெறுகின்ற அநீதி, குறைகள் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்,
எம்.பிக்களின் ஊடாகப் பொதுமனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்த முடியும். அந்த மனுக்களை அக்குழுவானது ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்மானமொன்றை அறிவிக்கும்.  

பொதுமனுக்கள் குழுவின் தற்போதைய தலைவராக, சர்வதேச வர்த்தக இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்தாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .