2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அடுத்த வாரத்தில் அதிரடி அறிவிப்பு

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மிகமுக்கியமான மற்றும் பலமிக்க தீர்மானங்கள் பலவற்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த சில வாரங்களுக்குள் எடுப்பார்” என்று, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களாக சகலவற்றுக்கும் இடம்கொடுத்து, தன்னுடைய ஜனநாயகப் பலத்தை காண்பித்துகொண்டிருந்தனர். எனினும், எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நிலைமையில் அவர் உள்ளார். அதற்கான கடுமையான, மிகவும் முக்கியமான தீர்மானங்கள் அவர் எடுப்பார் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.   

நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதியினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் சிலருக்குக் கசக்கும், சிலருக்கு நல்லதாகவே இருக்கும் எப்படியோ, அதிரடியாக சில முக்கியமான தீர்மானங்கள் அவர் எடுப்பார்.   

நாட்டின் எதிர்கால மேம்பாடு, ஆட்சியை நிலைநிறுத்தல், அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உருவாக்குதல், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை உருவாக்குதல் உள்ளிட்டவற்றை இந்த அதிரடி தீர்மானங்களில் எதிர்ப்பார்க்கலாம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   

கடந்த இரண்டுவருடங்களில் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களினால் சந்தோஷமடைந்த பல காரணங்கள் இருந்தன. எனினும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் சிலவற்றினால் சந்தோஷமடைய முடியாமலும் சிலருக்கு போகலாம்” என்றார்.   

இவ்வாறான அதிரடி தீர்மானங்களை முன்னரே எடுத்திருக்கலாம் தானே என, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா, அரச தலைவர் தீர்மானங்களை எடுக்கின்ற போது, அரசியல பாதுகாப்பு மற்றும் தன்னுடைய நிலைப்புத்தன்மை ஆகியன தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்துவார் என்றார்.

.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .