2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஒத்துழைக்க மறுக்கிறார் தளபதி’

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா திபான்

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில், வெள்ளை வானில் தமிழர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு தற்போதைய கடற்படைத் தளபதி ஒத்துழைப்புத் தருவதில்லை என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (23) அறிவித்தனர்.  

பக்கரிசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோர், 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வானொன்றில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். அந்தக் கடத்தல்; சம்பவத்துடன் தொடர்புடைய வான், வெலிசறை கடற்படை முகாமுக்குப் பின் பகுதியில் இருந்தாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்தது.  

கொழும்பு பிரதான நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சீ.ஐ.டி), இது தொடர்பில், தாம் நடத்திய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் நேற்று (23) சமர்ப்பித்தனர். அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.  

அத்துடன், கொழும்பு குற்றப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகராக இருந்த சுமுத சுதேஷ் விஜேசிங்க என்பவர், இந்தக் கடத்தல் தொடர்பில் இரகசிய விசாரணை நடத்தியதாகவும் அந்த அறிக்கையை, குற்றப்பிரிவின் அத்தியட்சகராக இருந்த அநுர சேனநாயக்கவிடம் கொடுத்தபோது, அதை வைத்திருக்குமாறு அவர் கூறியதாக, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று சீ.ஐ.டியினர் குறிப்பிட்டனர்.  

அக்காலப்பகுதியில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பிரிவின் அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளனவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிசற முகாமின் அதிகாரியாக இருந்தவரும் தற்போது, கடற்படை லெப்டினன் கொமாண்டராக உள்ளவருமான தம்மிக அனில் மாபாவை, ஏப்ரல் 6ஆம் திகதி திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

அவரின் பிணை தொடர்பில் நேற்று(23) அறிவிக்கப்படும் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில், பிணை உத்தரவின் அரைவாசியே எழுதப்பட்டுள்ளது என்று அறிவித்த நீதவான், எதிர்வரும் அமர்வில் அது தொடர்பில் அறிவிக்கப்படும் என அறிவித்தார்.  

பக்கரிசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோர், 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வானொன்றில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். அந்தக் கடத்தல்; சம்பவத்துடன் தொடர்புடைய வான், வெலிசறை கடற்படை முகாமுக்குப் பின் பகுதியில் இருந்தாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்தது.

கொழும்பு பிரதான நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சீ.ஐ.டி), இது தொடர்பில், தாம் நடத்திய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் நேற்று (23) சமர்ப்பித்தனர். அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.  

அத்துடன், கொழும்பு குற்றப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகராக இருந்த சுமுத சுதேஷ் விஜேசிங்க என்பவர், இந்தக் கடத்தல் தொடர்பில் இரகசிய விசாரணை நடத்தியதாகவும் அந்த அறிக்கையை, குற்றப்பிரிவின் அத்தியட்சகராக இருந்த அநுர சேனநாயக்கவிடம் கொடுத்தபோது, அதை வைத்திருக்குமாறு அவர் கூறியதாக, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று சீ.ஐ.டியினர் குறிப்பிட்டனர்.  

அக்காலப்பகுதியில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பிரிவின் அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளனவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிசற முகாமின் அதிகாரியாக இருந்தவரும் தற்போது, கடற்படை லெப்டினன் கொமாண்டராக உள்ளவருமான தம்மிக அனில் மாபாவை, ஏப்ரல் 6ஆம் திகதி திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .