2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நாளொன்றுக்கு 700 பேர் காய்ச்சலினால் சிகிச்சை

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 700 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருவதாக,  வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வைத்தியசாலையின் விடுதிகளில் 120க்கு மேற்பட்ட நோயாளர்கள், தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று  வருவதனால் விடுதியும் நிரம்பிக் காணப்படுகின்றது.

இதனால், காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், சிறுவர் விடுதிக்கு வெளியில்   தரையில் இருப்பதையும் காணமுடிகின்றது.

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால், இவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தற்போது இடமாற்றி வருகின்றோம்.

அத்துடன் குறித்த வைத்தியசாலையில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையினால், நோயாளர்களை கவனிப்பதில் சிரமங்கள் காணப்பகின்றன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .