2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

'எல்லோரும் ஒன்றிணைந்து சிறந்தவொரு இலங்கையை கட்டியெழுப்புவோம்'

Princiya Dixci   / 2017 மார்ச் 25 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
 
நாட்டின் இறமை, இனங்களிடையே சமாதாணத்தை ஏற்படுத்தல் ஒழுக்கத்தை நிலை நாட்டுதல் பொலிஸாரின் கடமையாகுமென அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவான் வெதசிங்க தெரிவித்தார்.
 
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவின் சம்மேளன உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (25)  நடைபெற்றது.
இதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
 
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
"30 வருட கால யுத்தத்தின் பின்னர் நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் பொலிஸார் தங்களது கடமைகளை சுதந்திரமாக செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, பொது மக்களும் சுதந்திரமாக எந்தவொரு இடத்துக்கும் எந்நேரமும் சென்று வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
பொலிஸாருக்கும் பொது மக்களுக்கமிடையிலான உறவை கட்டியெழுப்புவதில் சிவில் பாதுகாப்புகுழுக்கிளின் பணி இன்றியமையாததாக காணப்படுகின்றது.
 
கிராமங்களில் இடம்பெறுகின்ற சமூக சீர்கேடுகளை, சிவில் பாதுகாப்புக் குழு, பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். பொலிஸார் அவர்களது கடமைகளை சரிவர நிறைவேற்றுவார்கள். சட்டங்களை மக்கள் கையில் எடுக்காது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.
 
சமூகங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதே, சிவில் பாதுகாப்புக் குழுக்களாகும். இவற்றின் நடவடிக்கைகள் யாவும் மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதேயாகும்.
 
ஒரு பிரதேசத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை மிகவும் இலகுவாகவும், இணக்கப்பட்டுடனும் சுமுகமான தீர்வினை சிவில் பாதுகாப்பு குழு மூலம் தீர்த்து வைக்கப்படுகின்றது.
 
சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள், அப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் தங்களை ஈடுபடுத்துவதற்கு முன்வர வேண்டும்.
 
ஒருவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டால், அவர் எவ்வாறான தேவை உள்ளவர் என அடயாளம் கண்டு, அவருக்கான தொழில் வாய்ப்புகளை வழங்கி சமூகத்தில் இணைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் செயலாற்ற வேண்டும்.
 
எதிர்காலத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சிறந்தவொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .