2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் டெங்குவால் மூடப்பட்ட தனியார் கல்வி நிலையங்களை மீளத் திறக்க அனுமதி

Suganthini Ratnam   / 2017 மார்ச் 26 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியாப் பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த  தனியார் கல்வி நிலையங்கள் நாளை முதல் இயங்குவதற்கு கிண்ணியா சுகாதாரப் பணிமனையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அச்சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.அஜீத் தெரிவித்தார்.

தற்போது கிண்ணியாவில்  டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் தொகை குறைந்து வருகின்றது. இந்நிலையிலேயே, தனியார் கல்வி நிலையங்களை மீளத் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கிண்ணியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவந்த டெங்குக் காய்ச்சல் காரணமாக கடந்த 11ஆம் திகதி முதல் தனியார் கல்வி நிலையங்களை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, இதுவரைகாலமும் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
தனியார் கல்வி நிலையங்களின் வளாகங்களைச் சுத்தம் செய்து  திறக்க வேண்டும் என்பதுடன், நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை அடிப்பதற்கான உதவி கோரப்படும் பட்சத்தில் அது செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .