2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை; நாளை முதல் போராட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்து, கண்டி, உன்னஸ்கிரிய- எயாபார்க் தோட்டத் தொழிலாளர்கள், இன்று முதல் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேனகா கந்தசாமி தெரிவித்தார்.

"அரச காணிகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது", "தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வேலை வழங்கப்பட வேண்டும்" என்ற பிரதான இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து, மேற்படி தோட்ட மக்கள், செங்கொடிச் சங்கத்தின் ஏற்பாட்டில், கடந்த மாதம் 28ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இம்மக்களது போராட்டம், 3ஆவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், அரசாங்கத் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, அரச பெருந்தோட்ட யாக்கம் என்பன வழங்கிய வாக்குறுதியை அடுத்து, இப்போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

மூன்று வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்படுமென வாக்குறுதியளிக்கப்பட்டது. எனினும், வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ளபோதிலும், இன்னும் எவ்வித தீர்வும் கிடைக்காததன் காரணமாகவே, தொழிலாளர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இம்மக்களது பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும்வரை, இப்போராட்டம் தொடருமனெவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .