‘எவருக்கும் அஞ்சமாட்டேன்’
26-03-2017 03:48 PM
Comments - 0       Views - 23

“எனக்கு முதுகெலும்பு இருக்கின்ற காரணத்தால் நான், எவருக்கும் அஞ்சப்போவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

காலி நகரில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“அன்று, மஹிந்த ராஜபக்‌ஷவின் படத்தை பிடித்துக் கொண்டு அதற்கு கீழே 'நாம் உயிரே போனாலும் உங்களுடன் இருப்போம்' எனக் கூறிக்கொண்டு வாக்குகளை கேட்டுக் கொண்டு வந்தவர்கள், இன்று மாயமாகிவிட்டார்கள்.

"எனது ஆதரவு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே, அந்தவகையில், மஹிந்தவின் வெற்றியை, இங்கு கூடிய மக்கள் தொகை நிரூபித்துவிட்டது" என்றார்.

"‘எவருக்கும் அஞ்சமாட்டேன்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty