2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'பெண்களுக்கென விசேட நீதிமன்றங்கள் தேவை'

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

"பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை விசாரிப்பதற்கென, விசேட நீதிமன்றங்கள் இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை, அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, பெண்களுக்கெதிரான குற்றங்களை குறைக்க முடியும் என்பதுடன், வழக்கின் தீர்ப்புகளையும் விரைவாக வழங்க முடியும். இதன்மூலம் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்" என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மலையக மக்கள் முன்னணியின் மகளிர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் தின நிகழ்வு, மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதன் ஆலய மண்டபத்தில், இன்று (26) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“பெண்களுக்கான உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில், அவர்களுக்கென தனியான நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். அப்படி உருவாக்காமல், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது.

"பெண்கள் தொடர்பான வழக்குகள், அவர்களின் தனிப்பட்ட சுய கௌரவத்தைக் கருத்திற் கொண்டு, தனியான நீதிமன்றங்கள் தேவைப்படுகின்றது.

"இன்று இலங்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நிறைவடைவதற்கு, நீண்டகாலம் தேவைப்படுகிறது. தீர்ப்பு வழங்குவதற்குள் வழக்கின் சாட்யங்கள் பலர் உயிரிழந்து விடுகின்றனர். இதன் காரணமாக, பல வழக்குகளில் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைப்பதில்லை.

"புங்குடு தீவு மாணவி வித்தியாவின் வழக்கு, இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்குகள் தாமதம் ஆகின்ற காரணத்தால், பொதுமக்களுக்கு நீதிமன்றம் தொடர்பாக சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

"எமது நாட்டில், தற்போது நீதித்துறை மிகவும் சுயாதீனமாகச் செயற்படுகின்றது. எனவே, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமானால், அவர்களுக்கென தனி விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X