2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோணாவிலிலும் ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்தீபு

George   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி கோணாவில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு மீள் குடியமர்ந்த பின்னர், அக்கராயன் பிள்ளையார் கோவில் யூனியங்குளம் வழியாக கோணாவில் கிராமம் வரையாக நடைபெற்ற பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால்,  கடந்த ஏழு ஆண்டுகளாக, ஏழு கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் நடந்து சென்றே அக்கராயன் பிரதேச மருத்துவமனை மற்றும் கிளிநொச்சி நகரிற்குப் பயணிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1100க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்துக்கு  பஸ் சேவைகள் நடைபெறாததன் காரணமாக, கோணாவில் மகா வித்தியாலயம், அக்கராயன் மகா வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி நகரப் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

பஸ் சேவைகளை நடாத்துமாறு, அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையிலும் அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என, அந்த மக்கள் அங்கலாயகின்றனர்.

மேற்படி வழித்தடத்தில் பஸ் சேவையினை விரைவாக நடாத்தாவிட்டால், ஆர்ப்பாட்டம் ஒன்றினை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக  கோணாவில் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X