2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எம்.பி மீதான வழக்கு விசாரணை இன்று

Kogilavani   / 2017 மார்ச் 27 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அருண நிலாந்த ஜயசிங்க ஆகியோர் மீதான வழக்கு விசாரணை, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில், இன்று ஆரம்பிக்கவுள்ளது. இவர்கள் இருவர் மீதும், கொலைக் குற்றம் உள்ளிட்டதாக 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் தவிர, இன்னும் ஏழு பேர் மீதும், இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சட்டத்துக்குப் புறம்பாகக் கூடியமை, கொலை, ஜனாதிபதி வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார அலங்காரங்களைச் சேதமாக்கியமை உள்ளிட்டதாகவே, இந்த 9 குற்றச்சாட்டுகளும் அமைந்துள்ளன.

மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் குற்றங்கள், 2015ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கஹவத்தையைச் சேர்ந்த, சுனில் பெரேரா என அழைக்கப்படும் ஷாந்த தொடாங்கே என்பவர், இந்தச் சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். கருணாதாச வீரசிங்க, மொஹமட் ஹுஸைன் இருவரும், பாரதூரமான துப்பாக்கிக் காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக, இன்றைய தினத்தைக் குறித்த இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி றொஹான் ஜயவர்தன, சாட்சிகளுக்கும் இதை அறிவித்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தங்கள் மீதான குற்றச்சாட்டை, இன்னமும் ஏற்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .