2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'சூழலை அசுத்தமாக வைத்திருக்கும் அரசாங்க நிறுவனங்களுக்கு சீல்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 27 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருக்கும் அரசாங்க நிறுவனங்களாக இருந்தாலும், அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு,  சீல் வைக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இன்று (27)  நடைபெற்றது. இதில் டெங்கு நோய் தொடர்பில் ஆராயப்பட்டபோதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களாக மட்டக்களப்பு நகர்இ  காத்தான்குடிஇ ஏறாவூர்இ களுவாஞ்சிக்குடிஇ ஓட்டமாவடிஇ  ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்குச் செயலணியை உருவாக்கி அதனூடாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  தெரிவித்தார்.

வெற்றுக்கிணறுகள் மற்றும் தேவையற்ற குழாய்க்கிணறுகளை  உடைப்பதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி, 'டெங்கு நோய் மிகத் தீவிரமாக பரவி வருவதுடன், மட்டக்களப்பிலும் அபாயகரமான நிலைமை ஏற்படலாமென்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, டெங்கு நோய் பரவுவதைக்  கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.
மாகாண சுகாதாரத் திணைக்களம், உள்ளூராட்சி சபைகள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இது தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டுமென்பதுடன், மக்களுக்கும் விழிபுணர்வூட்ட வேண்டும்' என்றார்.  
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .