2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யூனியன் பென்சன் அட்வான்டேஜ் அறிமுகம்

Gavitha   / 2017 மார்ச் 27 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம், “யூனியன் பென்சன் அட்வான்டேஜ்| (Union Pension Advantage) எனும் புதிய விசேட காப்புறுதித்திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் தவணைக்கட்டண விலக்கழிப்பு அனுகூலம் (Waiver of premium benefit) உள்ளடக்கப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். தமது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரான காலப்பகுதியை மகிழ்ச்சியுடனும், இனிமையாகவும் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ள உங்கள் அனைவருக்கும் இந்த விசேடமான ஓய்வூதியத்திட்டம் என்பது மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும். 

இதுவரையில் இலங்கையினுள் ஆயுள் காப்புறுதி தொடர்பில் காணப்படும் ஈடுபாடு படிப்படியாக அதிகரித்த வண்ணமுள்ளது. அவ்வாறான சூழலில், வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்புறுதியின் முக்கியத்துவத்தை மேலும் தெளிவுபடுத்துவதற்கும், ஆயுள் காப்புறுதி சேவைகள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் பாரம்பரிய வரையறைகளுக்கு அப்பாற்பட்டத் தீர்வுகளை அறிமுகம் செய்வது அத்தியாவசியமானது என யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. யூனியன் பென்சன் அட்வான்டேஜ் என்பது அவ்வாறான தீர்வுகளை அறிமுகம் செய்வதில், நிறுவனம் காண்பிக்கும் முயற்சியில் மற்றுமொரு முக்கியமான படியாக அமைந்துள்ளது. 

இந்தக் காப்புறுதி ஏற்பாடுகளினூடாக, காப்புறுதிதாரருக்கு குறித்த காலப்பகுதி முழுவதும் ஆயுள் காப்புறுதியொன்று கிடைப்பதுடன், காப்புறுதிதாரருக்கு மரணம் சம்பவிக்கும் நிலையில், அவரில் தங்கியிருப்போருக்கு பணி ஓய்வுகால கொடுப்பனவு அனுகூலம் கிடைக்கும். தவணைக்கட்டணம் செலுத்தும் காலப்பகுதியில், காப்புறுதிதாரர் மரணிக்கும் நிலையில், அடிப்படை காப்புறுதித்தொகை வழங்கப்படும். காப்புறுதி ஆரம்பிக்கும் முன்னர் முதிர்வின் போது காப்புறுதி அனுகூலத்தொகையைப் பெற்றுக்கொள்ளும் விதம் தொடர்பில் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். காப்புறுதி முதிர்ச்சியடைந்த பின்னர் 10, 15 அல்லது 20 வருடங்கள் போன்ற காலப்பகுதிக்கு மாதாந்த கொடுப்பனவாகக் காப்புறுதிதாரருக்கு காப்பீட்டுத்தொகை வழங்கப்படும். தேவையெனில் ஒரே தடவையில் முழுத்தொகையையும் பெற்றுக்கொள்ளவும் முடியும். 

இந்தக் காப்புறுதித் திட்டத்தில் காணப்படும் மற்றுமொரு விசேடத்துவம் யாதெனில், தவணைக்கட்டணத்தை இடைநிறுத்தும் அனுகூலம் (Waiver of premium benefit) இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகும். தவணைக்கட்டணம் செலுத்தும் காலப்பகுதியில் காப்புறுதிதாரர் உயிரிழந்தால் அல்லது நிரந்தர மற்றும் முழுமையான அங்கவீனத்துக்கு உட்பட்டால் தவணைக்கட்டணம் செலுத்தி முடிக்கப்படும் காலப்பகுதி வரை நிறுவனத்தினால் தவணைக்கட்டணம் செலுத்தப்படுவதுடன், முதலீட்டு காலம் நிறைவடைந்த பின்னர் காப்புறுதிதாரர் உயிரிழக்கும் பட்சத்தில், முதிர்வுக்கான அனுகூலம் காப்புறுதிதாரரின் தங்கியிருப்போருக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்பதுடன், முழுமையான மற்றும் நிரந்தர அங்கவீனம் ஏற்படும் பட்சத்தில், காப்புறுதிதாரருக்கு அனுகூலம் வழங்கப்படும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .