2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மிகப் பெரிய தனியார் வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

Gavitha   / 2017 மார்ச் 27 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டில் சேவை விநியோகத்தில் கொமர்ஷல் வங்கி உயர்வான நிலையை எய்தியுள்ளதாக அறிவித்துள்ளது. தனது நிதிச் செயற்பாட்டுக்கு ஊக்கமளித்த செயற்பாட்டு அபிவிருத்திகள் ஊடாக இந்த நிலைகள் எய்தப்பட்டுள்ளன என அறிவித்துள்ளது.  

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நிதி விவரங்களின் படி இலங்கையின் மிகவும் இலாபம் ஈட்டும் தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி அதன் கிளை வலையமைப்பு விரிவாக்கத்தின் மூலம் 2016இல் அதை நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியாக பௌதிக ரீதியாகவும் நிலை நிறுத்தியுள்ளது என்று த்துள்ளது. அது 256 கிளைகளையும் 658 ATM வலையமைப்பையும் கொண்டுள்ளது. இந்த வலையமைப்பானது, குறிப்பிட்ட வருட முடிவில் 99.6% தாக்கம் மிக்க உயர்வைக் காட்டுகின்றது.  

சுய சேவை வங்கி முறையை விருத்தி செய்வதற்கான முயற்சியின் ஊடாக கொமர்ஷல் வங்கி ஐந்து புதிய தன்னியக்க வங்கிச் சேவை நிலையங்களை நிறுவியுள்ளது. இந்த நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் விரிவான பல சேவைகளைத் தாமாகவேப் பெற்று நிறைவேற்றிக் கொள்ள முடியும்.  

“தொழில்நுட்பங்கள் ஊடாகவோ அல்லது ஏனைய வழிகள் ஊடாகவோ சேவை விநியோகத்தில் நாம் செலுத்தி வருகின்ற கவனம் எமது வெற்றிக்கான முக்கிய தூண்களில் ஒன்றாக அமைந்துள்ளது. பிரத்தியேகமான நிதிச் செயற்பாட்டுக்கும் அது காரணமாக அமைந்துள்ளது” என்று கூறினார் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம். “அதன் விளைவாக இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியாக நாம் தொடர்ந்தும் நிலைத்துள்ளோம்.

அத்தோடு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தன்னியக்கச் செயற்பாடுகள் மூலம், வாடிக்கையாளர் சேவைகளை வழங்கும் பிரதான நிறுவனங்கள் மத்தியிலும் நாமே முன்னணியில் உள்ளோம்” என்றார். வங்கியின் தன்னியக்கச் செயற்பாடுகள் மீதான முதலீட்டின் ஒரு உதாரணமாக 2016இல் 29 பண வைப்பு இயந்திரங்கள் (CDMs) 10 பண மீள்சூழற்சி இயந்திரங்கள் என்பன நிறுவப்பட்டுள்ளமை அமைந்துள்ளன. இதன் மூலம் CDM களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X