2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கூட்டொப்பந்த விவகாரம்: வடிவேல் எம்.பிக்குச் சவால்

Gavitha   / 2017 மார்ச் 28 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எ. ஆ.ரமேஸ்

2017ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட புதிய கூட்டொப்பந்தத்தின் பிரகாரம், தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று
ஜே.வி.பியின் தொழிற் சங்கக் கட்சியான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் சவால் விடுத்துள்ளது.  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் துரோகியாக செயற்பட்டாலும் அந்தக் கட்சி தொழிலாளர்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பில், அச்சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவரான கிருஷ்ணன் செல்வராஜா, ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

சம்பள உயர்வு விவகாரத்தில், ஐ.தே.கவின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், துரோகமிழைக்கவில்லை எனில், அந்த சங்கத்தின் பொதுச்செயலாளரான வடிவேல் சுரேஷ் எம்.பி, புதிய கூட்டொப்பந்தத்தின் பிரகாரம், சம்பள உயர்வை பெற்றுகொடுக்கவேண்டும்.  

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என்பது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த நியதியாகும். 

இது நடைபெற்று முடிந்த, சம்பள நாடகத்தில் இரண்டு வருடகால இடைவெளியை உருவாக்கும் வகையிலும் முதலாளிமார் சம்மேளனத்துக்கு சார்பாக அமையும் வகையிலும் அமைத்து விட்டார்கள். இது மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெறும் துரோகம். 

கூட்டு ஒப்பந்த சட்டத்தின்படி, 2013 இல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் 2015இல் செய்யப்பட வேண்டும். ஆனால், நாடகமாடி 19 மாதங்களின் பின்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுவும் தொழிலாளர்களுக்கு பயனற்ற ஒப்பந்தமாகிவிட்டது. 

இந்த நிலையில் முதலாளிமார்களுக்கு சார்பாக ஒப்பந்தத்தைச் செய்து விட்டு ஒப்பந்த மீள் பரிசீலனை என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர். எது எவ்வாறாயினும் இவ்வருடம் புதிய சம்பளம் நேர்மையான வழியில் பெற்று கொடுக்க நாம் அழுத்தம் கொடுப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .