2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மக்களின் அபிமானம் வென்ற ஆயுள் காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃவ்

Gavitha   / 2017 மார்ச் 28 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIM நீல்சன் மக்கள் விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்ற போது  மக்களின் அபிமானம் வென்ற ஆயுள் காப்புறுதி நிறுவனம் என்ற விருதை செலிங்கோ லைஃவ் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் தொடர்ந்து 11ஆவது வருடமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி என்ற அந்தஸ்த்தை செலிங்கோ தக்கவைத்துள்ளது. 

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) கீர்த்திமிக்க வருடாந்த நிகழ்வு வோட்டர்ஸ் ஹெட்ஜில் இடம்பெற்றது. பல்வேறு வகைப்பட்ட நாட்டின் மிகச் சிறந்த வர்த்தக முத்திரைகளுக்கு இங்கு விருதுகள் வழங்கப்பட்டன. நாடு தழுவிய ரீதியில், மக்கள் மத்தியில் அபிப்பிராயங்கள் திரட்டப்பட்டே இந்த விருதுகள் வழங்கப்பட்டன. 

இந்த விருதுகள் வழங்கும் விழா 11 வருடங்களுக்கு முன் அறிமுகமானது முதல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி முத்திரையாக செலிங்கோ லைஃவ் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமை மிகவும் கீர்த்திமிக்க ஒரு விடயமாகும். இவ்வாண்டு முதற் தடவையாக இவ்வாண்டு பொதுக் காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி என்பனவற்றுக்காக தனித்தனியாக விருதுகள் வழங்கப்பட்டன. 2015ஆம் ஆண்டு சட்டப்படி காப்புறுதி வர்த்தகம் இவ்வாறு பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த விருதுகள் தனித்தனியாக வழங்கப்பட்டன. 

செலிங்கொ லைஃவ்வுக்குரிய விருதை கம்பனி சார்பாக முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ராஜ்குமார் ரெங்கநாதன் பணிப்பாளரும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியுமான துஷார ரணசிங்க ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். 

“நாம் செய்யும் எல்லாமே எமது காப்புறுதிதா ரர்களுக்காகத் தான் எமது நாட்டு சனத்தொகையில் சுமார் ஐந்து வீதம் எம்மோடு காப்புறுதி செய்து கொண்டுள்ளனர். உண்மையிலேயே நாங்கள் தான் மக்களின் ஆயுள் காப்புறுதிக் கம்பனியாவோம்” என்று ரெங்கநாதன் கூறினார். மக்கள் விருதுகள் முக்கியமானவை. காரணம் அது மக்களின் தெரிவை முறைப்படி உறுதி செய்கின்றது. எந்தவொரு வர்த்தகத்துக்கும் அது மிக முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .