அலைபேசியை களவாடிய குரங்குக்கு எதிராக முறைப்பாடு
29-03-2017 01:56 PM
Comments - 0       Views - 122

தனது கையடக்க தொலைபேசியை குரங்கொன்று களவாடிச் சென்றுவிட்டதாக வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் குரங்குக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ள சம்பவமொன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 26 வயதடைய பெண்ணே, இவ்வாறு குரங்குக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

 குறித்த பிரித்தானிய நாட்டுப் பெண், இலங்கையில் தாதியர் கற்கை நெறியை கற்பதற்காக அநுராதபுர போதனா வைத்தியசாலையில் தாதியராக பயிற்சி நெறியில் ஈடுபட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த பெண் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்த குரங்கொன்று, மேசையில் வைக்கப்பட்டிருந்த அவரது 5.000 பெறுமதியான கையடக்க தொலைபேசியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளது.

 இதையடுத்து, இது குறித்து பொலிஸ் நிலையத்தில் குரங்குக்கு எதிராக முறைப்பாடை பதிவுசெய்த குறித்தப் பெண், தனது கைடயக்கத் தொலைபேசியை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், குரங்கினால் எடுத்துச்செல்லப்பட்ட கையடக்கத்தொலைபேசி இதுவரை கண்டெடுக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

"அலைபேசியை களவாடிய குரங்குக்கு எதிராக முறைப்பாடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty