2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘மனோதிடம் கொண்ட சர்வதேசப் பெண்மணி’

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, மனோதிடம் கொண்ட சர்வதேசப் பெண்மணி என்று புகழாரம் செய்யப்பட்டுள்ளார்.  

இது தொடர்பில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இன்று (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஒவ்வொரு ஆண்டும், மனித உரிமை, நீதி, சமாதானம் மற்றும் பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காகச் செயற்படும் பெண்களின் மனோதிடத்துக்கும் கடப்பாட்டுக்கும் அங்கிகாரமளித்து வருகிறது.  

இலங்கையைச் சேர்ந்த சந்தியா எக்னெலிகொடவுக்கு, ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் 2017ஆம் ஆண்டுக்கான ‘மனோதிடம் கொண்ட சர்வதேசப் பெண்மணி’ என்னும் விருது வழங்கப்படவுள்ளது.  

முதல் பெண்மணி மிலானியா ட்ரம்ப் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க உதவிச் செயலாளர் தோமஸ் யு செனோன் ஆகிய இருவருமே, இந்த விருதை, எக்னெலிகொடவுக்கு வழங்கவுள்ளனர். 

இந்த விருது, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் பன்னிரெண்டு பெண்களுக்கும் வழங்கப்படவுள்ளது. அவர்களுடன் சந்தியா எக்னெலிகொடவும் இணைந்துள்ளார். 

சந்தியா எக்னெலிகொட, தனது கணவனுக்காகவும் இலங்கையின் பல்வேறு இன, மத சமூகங்களைச் சார்ந்த காணாமல் போனோர்களது குடும்பங்களுக்காகவும் சளைக்காமல் தொடர்ந்து செயற்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் அடுல் கேசாப் குறிப்பிடுகையில்,  

 “தமது அன்புக்குரிய காணாமல் போனோரின் தகவல்களைத் தேடிக்கொண்டிருக்கும் இலங்கையின் சகல இனத்தையும் சார்ந்த பெண்களின் கடப்பாட்டினையும் விடாமுயற்சியையும் சந்தியா பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். இலங்கை வாழ் அனைவருக்கும் உண்மை, மீளிணக்கம் மற்றும் நிலையான சமாதானம் நிறைந்த பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய முதல்படியாகும். அவர்களின் முயற்சிகளுக்கு அமெரிக்க மக்கள் ஆதரவளிப்பார்கள்” என்றார்.  

இவரது கணவர் காணாமல் போனது முதல், தீங்கிழைத்தவர்கள் பொறுப்புக்கூறும் வகையிலும் தமது கேள்விக்கு விடை தேடும் வகையிலும் சந்தியா 90 தடவைகளுக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.  

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட காணாமல் ஆக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் சகல பாகங்களுக்கும் வழமையான பயணங்களை அவர் மேற்கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .